’இது கோவையில் ஒருநாள்’:ஒரேநேரத்தில் 12 சிக்னலை நிறுத்தி குழந்தைக்கு சிகிச்சை அளித்த திக்திக் நிமிடங்கள்.!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 08, 2018 05:52 PM
Kovai stops twelve signals to a stun to treat a child

கோயம்புத்தூரில் 12 போக்குவரத்து சிக்னல்களை ஒரே நேரத்தில் நிறுத்தி, துண்டிக்கப்பட்ட விரல்களை குழந்தைக்கு இணைத்த செயலுக்காக கமிஷ்னர், ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளிட்டோர் பாராட்டினை பெற்றுள்ளனர்.  நாமக்கல், பெரியமனலி, ஜேடர்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ஜெய்பிரகாஷ். முந்தைய நாள் மின்விசைத்தறி இயங்கி கொண்டிருந்தபோது இவரின் ஒரு வயது குழந்தை, தெரியாமல் கையை உள்ளே விட்டுவிட்டதால் துரதிர்ஷ்டவசமாக குழந்தையின் நான்கு விரல்கள் துண்டாகின.

 

உயிர் போனதுபோல் மனம் கலங்கி செய்வதறியாது தவித்த ஜெய்பிரகாஷூம், அவரது மனைவி தாமரையும் குழந்தையை தூக்கிக்கொண்டு கோவை கங்கா மருத்துவமனைக்கு செல்ல முற்பட்ட போது அது பீக்-டைம் என்பதால் டிராஃபிக் நிறைந்திருந்தது.  அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்க தலைவர் திபேஷ், கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் பெரியய்யாவுக்கு போன் செய்து, போக்குவரத்து இடையூறின்றி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டி நிலையை விளக்கினார்.

 

சூழலை புரிந்துகொண்ட கமிஷ்னரும்  அவிநாசி ரோடில் உள்ள சிட்ரா முதல் சாய்பாபா காலனி, கங்கா மருத்துவமனை வரை வழிநெடுக உள்ள 12 சிக்னல்களை,  ஒரே நேரத்தில் ரெட் சிக்னல் போட்டு அனைவரையும் ஒதுங்கி நிற்க கட்டளையிட்டார்.  அவர் சொன்னபடியே நேற்று மாலை, அந்த 12 சிக்னல்களிலும், 'கிரீன் காரிடர்' முறையில், போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல வழிசெய்தனர். 

 

இறுதியில் ஆம்புலன்சில் கோவை கங்கா மருத்துவமனை அடைந்தது. குழந்தையின் விரல்களை  ஐஸ் பெட்டிக்குள் வைத்து, எடுத்துச் செல்லப்பட்டதால் உடனடியாக இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதனை அடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் திபேஷ், அன்னை அறக்கட்டளை ஆனந்தகுமார், குழந்தையின் தந்தை ஜெய்பிரகாஷ் ஆகியோர் போலீஸ் கமிஷ்னர் பெரியய்யாவை சந்தித்து நன்றி கூறினர்.தமிழ் மற்றும் மலையாளத்தில் இதுபோன்ற சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒருநாள் எனும் திரைப்படம் வெளிவந்தது.

Tags : #CHILD #COIMBATORE #CHENNAIYILORUNAL #KOVAIYILORUNAL #HOSPITAL #TREATMENT #TRAFFICSIGNAL #POLICE