பொது நிகழ்ச்சியில் ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல்துறை துணை ஆணையர் !

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 03, 2018 04:44 PM
Father umamaheswara sarma salutes IPS daughter sindhu sarma telangana

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையில் பணியாற்றுவது என்பது மிகவும் அபூர்வம்.அதுவும் தந்தைக்கு மேல் அதிகாரியாக மகள் இருப்பது மிகவும் அரிதான ஒன்று.அதோடு மட்டும் அல்லாமல் அந்த தந்தைக்கு மிகவும் நெகிழ்ச்சியான ஒரு தருணம் ஆகும்.அதுபோல் ஒரு நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

 

ஹைதராபாத்தில் ரச்சகொண்டா போலீஸ் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட மல்காஜ்கிரி பகுதி காவல் துறை துணை ஆணையராகப் பணியாற்றி வருபவர் ஏ.ஆர். உமாமகேஷ்வர சர்மா. இவர் கடந்த 1985-ம் ஆண்டு ஆந்திரா போலீஸ் தேர்வில் எஸ்.ஐ.யாக தேர்வானவர். அதன்பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது போலீஸ் துணை ஆணையராக இருக்கிறார். அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.

 

உமாமகேஸ்வரராவின் மகள் சிந்து சர்மா. இவர் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று  கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். தனது தந்தை எஸ்ஐயாக இருந்து படிப்படியாக பதவி உயர்வில் தற்போது காவல்துறை துணை ஆணையராக உயர்ந்துள்ளார். தந்தை பணியாற்றும் துறையிலேயே மகள் உயர் பதவியை அடைந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

 

சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.யாக சிந்து சர்மா நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், கொங்கலா காலன் பகுதியில் நேற்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் பாதுகாப்புப் பணிக்காக, உமாமகேஸ்வர ராவும், அவரின் மகள் சிந்து சர்மாவும் ஒரே இடத்தில் பணியாற்றினார்கள்.

 

தந்தையும், மகளும் ஒரே இடத்தில் பணியாற்றியபோது இருவரும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. அப்போது, தன்னைவிட  உயர்ந்த பதவியில் இருக்கும் மகளைப் பார்த்து நெகிழ்ச்சியுடனும் பெருமையுடனும்  உமாமகேஸ்வரராவ் சல்யூட் அடித்தது உணர்வு மிகு தருணமாக அமைந்தது.

 

வழக்கமாகக் உமாமகேஸ்வர ராவ் கடமை அடிப்படையில் உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து வருகிறார். ஆனால், முதல்முறையாகத் தனது மகளை தன்னைக் விட உயர்ந்த பதவியில் வைத்துப் பார்த்ததையும்,அவருக்கு சல்யூட் அடித்த அந்த நிமிடத்தைவிட ஒரு தந்தைக்கு பெருமைமிகு தருணம் வேறு என்ன இருக்க முடியும்.

 

இதுகுறித்து சிந்து சர்மா கூறுகையில், “என் தந்தையுடன் பணியாற்றியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவரும் ஒன்றாகப் பணியாற்ற மிகச்சிறந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” எனத் தெரிவித்தார்

Tags : #POLICE #IPS #SALUTE