திருட்டுக்கு முன் 'டான்ஸ் ஆடி' சிசிடிவில் சிக்கிய கொள்ளையர்கள்.. வீடியோ உள்ளே!

Home > News Shots > Tamil Nadu

By |
Delhi six burglars caught dancing on CCTV Delhi Police

வடக்கு டெல்லி அருகே உள்ள லாஹூரி கேட் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட  கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்கள் திருடுவதற்கு முன்பு சம்பவம் நடைபெற்ற கடையின் முன் நடனமாடிய   சிசிடிவி காட்சிகள் மூலம், காவல்துறையினர் அந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

 

அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மூலம் திருடர்கள் கடையின் கதவை உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.மேலும் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பு சந்தோஷத்தில் அந்த கடையின் முன்பு நடனமாடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

 

இதுகுறித்து  காவல்துறை துணை ஆணையர்(வடக்கு) நுபுர் பிரசாத் கூறுகையில், ''கொள்ளையர்களிடம் இருந்து இரண்டு லேப்டாப்,எல்சிடி டிவி மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் மீட்கப்பட்டன.மேலும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட பயங்கர இரும்பு ஆயுதங்களும் மீட்கப்பட்டது.சிசிடிவி மூலமே கொள்ளையர்களை  எளிதாக அடையாளம் காண முடிந்தது. கொள்ளையர்கள் கடையின் கதவை உடைக்கும் போதும்,கடையின் முன்பு நடனமாடும் போதும் அவர்களின் முகம் தெளிவாக சிசிடிவில் பதிவாகியுள்ளது,'' என்றார்.

 

மேலும் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஆலம் என்பவருக்கு  43 கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும், அவனின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும்காவல்துறை ஆணையர்  தெரிவித்திருக்கிறார்.

Tags : #POLICE #DELHIPOLICE #BURGLARS #CCTV