'பெட்ரோல் விலை உயர்வைத் தடுக்க'... செலவை குறைத்துக் கொள்ளுங்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 12, 2018 11:17 AM
Rajkumar Rinwa blames citizens for soaring fuel fuel prices

பெட்ரோல் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு செல்கிறது.இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள்.இந்நிலையில் இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக  அமைச்சர் தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

அம்மாநிலத்தின் தேவஸ்தான துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்குமார் ரின்வா. இவர், பொதுமக்களுக்கு அறிவுரை கூறுவதாக நினைத்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தான் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. விலையேற்றம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த ராஜ்குமார் "பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றின் விலை உயர்கிறது. இது, பொதுமக்களுக்கு புரியவில்லை. மேலும் நாடு முழுவதும் நிவாரண பணிகளுக்காக ஏராளமான தொகை தேவைப்படுகிறது.இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 'அவரது பேச்சு மனிதத்தன்மை அற்றது.அவரின் ஆணவத்தின் வெளிப்பாடுதான் இத்தகைய பேச்சு என கடுமையாக தெரிவித்துள்ளார்.

Tags : #BJP