சட்டத்தை மதிக்காதது உட்பட.. 8 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 16, 2018 09:24 PM
Police file case on BJP national secretary H.Raja

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள மெய்ப்புரத்தில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். ஊர்வலத்தின்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் சென்னை உயர்நீதிமன்றம் குறித்து இழிவாகப் பேசினார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்தநிலையில் திருமயம் போலீசார் எச்.ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #BJP #HRAJA