டெஸ்ட் மேட்ச்: அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 04, 2018 05:16 PM
Youngest Indian player prithivshaw to score test ton in debut

அறிமுகப்போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தபடி வருகின்றன.  ஜாசன் ஹோல்டர் தலைமையில் 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுக்கு எதிராக கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி விளையாடும் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 293-வது வீரராக தேர்வு செய்யப்பட்ட பிரித்வி ஷா விளையாடியுள்ளார்.


முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் பிடித்தது. முதலில் கே.எல்.ராகுலையும் அறிமுக வீரர் பிருத்வி ஷாவையும் களமிறக்கியது. கப்ரியலின் முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய புஜாராவுடன் கைகோர்த்த பிரித்வி ஷா, 99 பந்துகளில் சதம் அடித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.  154 பந்துகளுக்கு 134 ரன்கள் என்கிற நிலையில்,ஆட்டமிழந்த  பிரித்வி ஷா  அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்துள்ளது ட்ரெண்டாகி வருகிறது.

Tags : #CRICKET #TESTMATCH #CRICKET2018 #KOHLI #INDIA #PRITHIVSHAW