மின்னல் மனிதர்கள்...ட்விட்டரில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 29, 2018 10:37 PM
Ravindra jadeja fielding and Dhoni\'s stumping in asia cup goes viral

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான இறுதி போட்டியில் இந்திய வங்கதேசத்தை தோற்கடித்து திரில் வெற்றியை பெற்றது.இந்த போட்டியில் தனது சிறப்பான ஃபீல்டிங்ற்காக  ஜடேஜாவும் தனது அசத்தலான கீப்பிங்கிற்காக தோனியையும் ட்விட்டரில் கொண்டாடி தீர்த்து விட்டார்கள் இந்திய ரசிகர்கள்.

 

டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் செய்ய முடிவு செய்தது. 27வது ஓவரில், யுஸ்வேந்திர சஹாலின் பந்து வீச்சை எதிர் கொண்ட லிட்டன் தாஸ், ரன் எடுக்க முயற்சித்தார். எனவே, மொஹமத் மிதுன் ரன் எடுப்பதற்காக ஓடினார் ஆனால் அவர் பாதி தூரத்திற்கு வந்த பிறகு லிட்டன் தாஸ் ரன் எடுக்க வேண்டாம் என தெரிவித்தார்.

 

ஆனால் மொஹமத் மித்துன் க்ரீஸை மீண்டும் கடந்து வருவதற்குள், மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்த  ஜடேஜா 1.48 நொடிகளில் 6.61 மீட்டர் தொலைவை கவர் செய்து பந்தை பிடித்தார்.. உடனே பதற்றப்படாமல் சாஹலிடம் பந்தை வீசி மிதுனை ரன் அவுட் செய்தார்.அதேபோல் லிடன் தாஸை கண் இமைக்கும் நொடிக்குள் (00:16 ) தோனி ஸ்டெம்பை செய்தார். அதே போல மொர்த்தஷாவையும் தோனி ஸ்டெம்பிங் செய்தார்.

 

தோனியின் ஸ்டெம்பிங் மற்றும் மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்த  ஜடேஜாவின் வீடியோக்காட்சிகள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.