ராகுல் டிராவிட் எல்லாம் அப்பவே அப்படி.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 17, 2018 08:41 PM
Cricketer Rahul Dravid Reacts for an young girl\'s proposal Goes Viral

90-களின் உச்சத்தில் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் போன்றவர்கள்தான் அன்றைய இளம் பெண்களின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்றே சொல்லலாம். இன்றைய தேதியில் பாலிவுட் ஸ்டார்களுக்கு இணையாகவே அன்று சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

அப்படி ஒரு புகழின் உச்சியில் ராகுல் டிராவிட் இருந்தபோது சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு பெண் பத்திரிகையாளர் ராகுல் டிராவிட்டை விடாமல் இம்சை செய்து ஒரு வழியாக இண்டர்வியூவுக்கு சம்மதிக்க வைத்துள்ளார். 

 

ஆனால் இண்டர்வியூ முடிந்த பின்னர், சாப்பிடத் தொடங்கிய ராகுல் டிராவிட்டிடம், அந்த பெண் ஏதேதோ பர்சனலாக பேசிக்கொண்டே நெருங்கி தன் காதல் விருப்பதைத் தெரிவிக்க, உடனே ராகுல் டிராவிட் சற்றும் யோசிக்காமல், கோபப்பட்டு எழுந்து கிளம்பத் தொடங்குகிறார். அவரின் கைகளைப் பிடித்து அவரிடம் பேச முயன்ற பெண்ணிடம் ராகுல் மேற்கொண்டு, ‘உனக்கு எத்தனை வயது ஆகிறது?.. இந்த அறையை விட்டு வெளியில் செல்.. இல்லையென்றால் நான் போகிறேன்’ என்று கிளம்பி நடையைக் கட்டத் தொடங்குகிறார். 

 

அதன் பின்னர் வந்த ஒருவர், தான்தான் அப்பெண்ணின் அப்பா என்றும், தன் மகளுக்கு ராகுல் டிராவிட் என்றால் மிகவும் பிரியம் என்று எடுத்துச் சொல்லி அவரை மனமாற்றம் செய்கிறார். ஆனாலும் விடாப்பிடியுடன் கிளம்ப எத்தனிக்கும் ராகுலுக்கு காத்திருந்தது சர்ப்ரைஸ். அதாவது அவர்கள் நாடகத்தனமாக நடித்திருக்கிறார்கள். தற்போது நாம் பயன்படுத்தும் பிராங்க்’தான் அது. 

 

எம்.டி.வி.பக்ரா-வுக்காக பேட்டி எடுத்த அந்த பெண் பத்திரிகையாளருக்கு அப்போது 20 வயது. சைரஸ் புரோச்சா எனும் பெயருடைய அந்த பெண், தற்போது #MeToo விவகாரத்தில் பலரும் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் செய்த பாலியல் தவறுகளுக்காக சிக்கிக் கொண்டிருக்க, அன்றே கண்ணியத்துடன் பெண்களிடம் நடந்துகொண்ட ராகுல் டிராவிட் என்று மறைமுகமாகச் சொல்லி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Tags : #METOO #METOOINDIA #RAHULDRAVID #CRICKETER #INTERVIEW #VIRAL #VIDEO