இந்த பூனைக்குட்டியை பாருங்க.. நிச்சயமா ஆபீசுக்கு ஒருத்தர் நினைவுக்கு வருவார்..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 15, 2018 09:55 PM
Adorable Kitten Struggles to Stay Awake Video Goes Viral

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் பூனைக்குட்டி ஒன்று டியூட்டியில் இருக்க முயற்சித்து முடியாமல் தூங்கித் தூங்கி விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஓடி, ஆடி விளையாண்டுவிட்ட மைலோ என்கிற இந்த  பூனைக்குட்டி எல்லாம் ஓய்ந்து, சில நேரம் அமைதியாக உட்கார முயற்சித்துள்ளது.

 

ஆனாலும் அதிக அயர்ச்சியின் காரணமாக பூனைக் குட்டியால் ஒரு கட்டத்துக்கு மேல், நிதானமாக அமர்ந்து இருக்க முடியவில்லை. எனவே மெதுவாக தூங்கி கீழே விழும் நேரத்தில், மீண்டும் சுய நினைவுக்கு வர முயற்சித்து தன்னை இறுக்கமாக் வைத்துக்கொள்கிறது. அவ்வப்போது விழித்தும் பார்த்துக்கொள்கிறது. 

 

ஆனாலும் தன்னை மீறி வரும் தூக்கத்துக்கு ஆட்பட்டு, பூனைக்குட்டி விழுந்து விழுந்து தூங்குவதை அதன் உரிமையாளர் நஃபின் எலியாஸ் வீடியோ எடுத்து பதிவிட்டு , இந்த சேட்டைப் பூனைக்குட்டியின் செயலை வைரலாக்கியுள்ளார். ஆனால்  பலரது கேள்வி என்னவென்றால் இதற்கு அந்த பூனைக்குட்டி நன்றாக படுத்து உறங்கலாமே என்பதுதான். ஆனால் டியூட்டியில் இருக்கும்போது அலுவலகத்தில் சில ஊழியர்கள் செய்வதுபோலவே, வகுப்பு நடத்தும்போது வகுப்பறையில் மாணவர்கள் செய்வது போலவே இந்த பூனைக்குட்டி செய்வதுதான் ஆச்சரியம்.

 

Tags : #VIRAL #VIDEO #NEW JERSEY #HAWTHORNE #NAFIN ELIAS #KITTEN MILO