'நானும் பிற வீரர்களின் ஸ்டைலை காப்பி அடித்தேன்'.. உண்மையை ஒப்புக்கொண்ட வீரர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 23, 2018 11:40 AM
It\'s a wonderful feeling to see kids copying my action: Jasprit Bumrah

சிறுவயதில் நானும் பிற வீரர்களைப் பார்த்து அவர்களின் ஸ்டைலை காப்பி அடித்தேன் என, இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் ஜஸ்பிரிட் பும்ரா போல ஓடிவந்து பந்து வீசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பும்ரா போல ஓடிவந்து பந்து போடும் அந்த சிறுவனின் வீடியோவை இதுவரை சுமார் 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

 

இந்தநிலையில் அந்த வீடியோ குறித்து ஜஸ்பிரிட் பும்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,'' நான் சிறுவனாக இருந்தபோது முன்னாள் வீரர்கள் போல பவுலிங் செய்ய முயற்சிப்பேன். தற்போது என்னைப்போல சிறுவர்கள் முயற்சி செய்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #JASPRITBUMRAH