விராட் கோஹ்லி டிசைன் செய்த கிளாசிக் ஒன்-8 ஷூ.. ட்ரெண்டிங்கில்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 18, 2018 04:30 PM
Virat Kohli launches Classic one8 shoes for PUMA which he designed

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி டிசைன் செய்த புதிய ரக புமா ஷூக்கள் இணையத்தில் பிரபலமாகி வருகின்றன. ஸ்போர்ட் ஷூக்களின் தயாரிப்பில் இணையற்ற , தரம் மிக்க நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கிவரும் புமா மிகவும் புகழ்பெற்ற பல புதிய வகைகளையும் ரகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தானே பார்த்து தனது விருப்பமான ஸ்டைலுக்கு ஏற்றவாறு புமாவின் புதிய ONE8 ரக ஷூக்களை டிசைன் செய்து அறிமுகப்படுத்தியுள்ளார். 100 சதவீதம் தன்னால் டிசைன் செய்யப்பட்ட 100 சதவீதம் பாஸ்கெட் கிளாசிக் டச் கொண்ட இந்த ஷூக்கள் கறுப்பு, வெள்ளை என இருநிறங்களிலும் கிடைக்கவிருப்பதாகவும் கூறி தன் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இந்த கிரியேட்டிவ் கிரிக்கெட்டர்!

Tags : #VIRATKOHLI #CRICKET #PUMA #ONE8 #VIRATDESIGNSNEWSHOES #SPORTS