"சச்சினால் இரவு முழுவதும் நான் அழுதுக் கொண்டே இருந்தேன்":பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 17, 2018 11:06 AM
Bigg Boss Sreesanth thank Sachin for remembering his name

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.அதை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.இதில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

 

ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணி, 2007-ல் இருபது ஓவர் உலக கோப்பையை வென்ற போதும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்ற போதும்,இந்திய அணியில் அங்கம் வகித்தவர். 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, டெல்லி காவல்துறை கைது செய்தது. பிசிசிஐ நிர்வாகமும், ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது.பல போராட்டங்களுக்கு நடுவே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

 

அவர் தனது சக போட்டியாளர் அனூப் என்பவரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர் குறித்து நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.அதில் "2011 உலக கோப்பையை வென்று ஓரிரு ஆண்டுகள் கழித்து அணியின் அத்தனை வீரர்களையும் ஒன்றாக நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

 

அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அணியில் அங்கம் வகித்த அனைத்து வீரர்களின் பெயரையும் சொல்லி, சிறப்பாக விளையாடினார்கள் என்று பேசினார். என் பெயர் விடுபட்டது. உடனே சச்சின், ‘உலக கோப்பையை வென்றதில் ஸ்ரீசாந்துக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது’ என்றார். அன்று இரவு முழுவதும் நான் அழுதுக் கொண்டே இருந்தேன்’ என்று உருக்கமாக தெரிவித்தார். இது பிக் பாஸ் வீட்டில் மட்டும் அல்லாமல், அதைப் பார்த்தவர்களையும் நெகிழச் செய்தது.

Tags : #CRICKET #BIGG BOSS #SREESANTH #SACHIN TENDULKAR