"என் அன்பு நண்பரே வருக"...சச்சினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரைன் லாரா!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 20, 2018 01:06 PM
Brian Lara surprise visit to Sachin Tendulkar home

இந்திய கிரிக்கெடின் கடவுள் என அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.இவரும் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர பேட்ஸ்மேன் பிரைன் லாராவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவ்வப்போது சந்தித்து கொள்வது வழக்கம்.அதேபோல் ஒரு சர்ப்ரைஸ் விசிட்டை சச்சின் வீட்டிற்கு அடித்திருக்கிறார் லாரா.

 

நேற்று  சச்சினிடம் சொல்லாமல் திடீர் என்று  அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார் பிரைன் லாரா. இதை சற்றும் எதிர்பார்க்காத சச்சின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.லாராவை வரவேற்கும்படியான அவருடன் இருக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளார்.

 

45 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.49 வயதாகும் பிரைன் லாரா 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,405 ரன்களை எடுத்துள்ளார்.

 

இன்ஸ்டாகிராமில் லாராவை வரவேற்கும் சச்சினின் ஃபோட்டோ ரசிகர்களின் ஹெர்ட்களை அள்ளி வருகிறது.

Tags : #CRICKET #SACHIN TENDULKAR #BRIAN LARA #SURPRISE VISIT