'80 வயதானாலும் தோனி என் அணியில் இருப்பார்'.. பிரபல வீரர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 22, 2018 07:39 PM
MS Dhoni is 80, still play in my team- AB De Villiers

80 வயதானாலும் தோனி என் அணியில் இருப்பார், என பிரபல வீரர் டிவிலியர்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

அதிரடி கிரிக்கெட் வீரர், 360 வீரர் என புகழப்படும் ஏபி டிவிலியர்ஸ் ஏ.என்.ஐ நிறுவனத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தோனி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு,''தோனி என் அணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் ஆடுவார். அவருக்கு 80 வயதாகியிருக்கலாம், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கலாம், ஆனாலும் தோனி என் அணியில் இருப்பார்.

 

தோனியைப் போன்ற  ஒரு வீரரை அணியிலிருந்து நீக்க முடியுமா என்ன? அவர் அணியில் இருக்கத்தான் வேண்டும். நான் அவரை அணியிலிருந்து நீக்க மாட்டேன்,'' என தெரிவித்துள்ளார்.