'இந்த வீரர் அதற்கென்றே தயாரிக்கப்பட்டவர்'.. சிஎஸ்கே வீரரைப் புகழ்ந்து தள்ளும் தளபதி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 20, 2018 07:46 PM
Virat Kohli feels Ambati Rayudu the right person to solve no 4

இந்திய அணிநீண்டகாலமாக மிடில் ஆர்டரில் நிலையான பேட்ஸ்மேன் இன்றி தவித்து வருகிறது. குறிப்பாக 4-வது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவார்கள் என்பதைக் கணிப்பதே பெரும்பாடாக இருந்து வருகிறது.

 

இந்தநிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்குவதற்காகவே தயாரிக்கப்பட்ட வீரர் இவர் என, விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பாதி ராயுடுவைப் புகழ்ந்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,'' ராயுடு முதிர்ச்சியான பேட்டிங் திறன் கொண்டிருப்பதால், நடுவரிசையில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணிக்கு பெரிய மாற்றமாக இருப்பார். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கென்றே தயாரிக்கப்பட்ட வீரர் இவர்,'' என தெரிவித்திருக்கிறார்.

 

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக ஆடிய ராயுடு இங்கிலாந்துக்கு எதிரான யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்தார். எனினும் ஆசியக் கோப்பையில் இடம்பிடித்த ராயுடு, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHENNAI-SUPER-KINGS #CSK #VIRATKOHLI #AMBATIRAYUDU