தீர்ப்பு வந்து, பெண்கள் ஒருவர் கூட நுழைய முடியாத நிலையில்.. சன்னிதானம் இன்று!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 22, 2018 11:28 AM
After so long protests, Sabarimala Temple is to closed today Kerala

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க இருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து,  அக்டோபர் 18-ம் தேதி கோயில் திறக்கப்பட்டது. பின்பு ஏற்பட்ட கலவரம் மற்றும் தாக்குதல்களையும் தாண்டி, போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்குள் செல்ல முயற்சித்த 2 பெண்கள் தேவசம் போர்டு பந்தள மன்னரின் அறிவிப்பால் திருப்பி அனுப்பப் பட்டனர். 

 

தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவளித்த பினராய் விஜயன் பின்னர் கலவரத்துக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் மீது குற்றம் சாட்டினார். ஆனால் பின்னர் தேவசம் போர்டிடமே முழுமையான முடிவினை ஒப்படைத்தார். 

 

எனினும் போராட்டம் வலுத்து கலவரமாகவே, பக்தர்களின் பக்கம் நிற்க தொடங்கியது தேவசம் போர்டு. பின்னர் பெண்களை 10-50 வயதுக்குட்பட்ட பெண்கள் வரவேண்டாம் வேண்டுகோள் விடுத்தது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மிரட்டல் விடப்பட, அவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

மேலும் 5 நாட்களுக்கு பிறகு இன்று இரவுடன் கோவில் நடை மூடப்படுகிறது. இந்த நாட்களில் 10-50 வயதுக்குட்பட்ட பெண்கள் 9 பேர் கோவிலுக்குள் நுழைய முயற்சித்து அத்தனை பேரும் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.