பத்திரிகையாளர்கள்-காவலர்கள்-பக்தர்கள் மீது தாக்குதல்.. சபரிமலை கோவில் பூஜை தொடங்கியது!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 17, 2018 06:54 PM
Media personnel, devotees, policemen were attacked Sabarimala Temple

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு பெண்களுக்கு இருந்த தடையை நீக்கி, சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்ட பிறகு தற்போதே கோவில் நடை திறக்கப்பட்டது.

 

எனினும் இந்த தீர்ப்புக்கு எதிரான கோவில் பக்தர்களும், மத ரீதியாக இதனை எதிர்ப்பவர்களும் இந்த தீர்ப்பினையும் அதன் தொடர்ச்சியாக தற்போது கோவிலுக்குள் வரும் பெண்களின் வருகையையும் எதிர்த்து போராட்டம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

 

இதனையடுத்து இந்தியா டுடே, ஏ.என்.ஐ பத்திரிகையாளர்கள் உட்பட 10 பத்திரிகையாளர்கள், 5க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், 15 காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சபரிமலை கோவிலில் இரவு 10.30 மணி வரையில் வழிபாடு நடைபெற தொடங்கியது.