சபரிமலை கலவரத்தில் கருத்து சொன்ன பினராய் விஜயன் ஒரு இந்து விரோதி:எச்.ராஜா ஆவேசம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 18, 2018 10:16 PM
Kerala CM Pinarayi Vijayan is an Anti Hindu, Says H Raja

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான முடிவினை தேவசம் போர்டிடம் ஒப்படைத்துள்ளார் கேரள முதல்வர் பினராய் விஜயன். முன்னதாக, சபரிமலை கோவில் பூஜை நாளில் பெண்கள் வருவதை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இறுதியில் பத்திரிகையாளர் மற்றும் காவலர்கள் மீதான தாக்குதலில் போய் இந்த போராட்டம் முடிந்தது. 

 

இதற்கு கருத்து கூறிய பினராய் விஜயன், கேரளாவில் இருக்கும் மலைவாழ் மக்களே பம்பை-நிலக்கல்-சபரிமலை பகுதியில் உள்ளதாகவும் போராட்டம் எனும் பெயரில் சபரிமலைக்கு கலங்கம் விளைவித்தவர்கள் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளாகத்தான் இருப்பார்கள் என ட்வீட் பதிவிட்டிருந்தார். 

 

இதுகுறித்து பாஜக’வைச் சேர்ந்த எச்.ராஜா, தன் காவிரி புஷ்பகர பூஜைகளை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்துள்ளார். அதன்படி, சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்றும் அவர் ஒரு இந்தவிரோத சக்தி என்றும் கூறினார். மேலும், கேரளாவில் நிலைகொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியானது கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.