சபரி மலையில் தொடரும் பதற்றம்:"பெண்களே திரும்பி செல்லுங்கள்"...கோரிக்கை வைக்கும் வயதான பெண்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 17, 2018 10:07 AM
Kerala elderly woman are requesting other woman for not go sabarimala

சபரி மலைக்கு வயது வித்தியாசம் இன்றி பெண்கள் அனைவரும் செல்லலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக பெரும் போராட்டங்கள் வெடித்தன.மாதவிடாய் பிரச்னையை காரணம் காட்டி அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

 

சபரி மலைக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலக்கல் பகுதியில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு வரும் வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கார்கள், பஸ், டாக்ஸி உள்ளிட்டவையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையின்போது பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களிடம் பாரம்பரிய முறையை பின்பற்றுங்கள். சபரி மலைக்கு செல்லாதீர்கள் என்று வயதில் முதிய பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

இந்நிலையில் ,சபரி மலைக்கு செல்லும் பெண்கள் எவரையும் தடுக்கக் கூடாது என்று முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.கடும் போராட்டங்கள் நடந்து வருவதால் சபரி மலை பகுதிகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான போலீசார் சபரிமலைக்கு செல்லும் வழி நெடுகிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #KERALA #SABARIMALA TEMPLE #OPEN DOORS TO WOMEN