சபரிமலைக்குள் பெண்கள் செல்வதில் தேமுதிக முரணான கருத்து: ‘புதிய பொருளாளர்’ பிரேமலதா!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 19, 2018 05:04 PM
DMDK wont support Sabarimala Verdict to the entry of womens Premalatha

சபரிமலைக்கு பெண்கள் செலவதை தேமுதிக ஆதரிக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதகான அனுமதியும் மறுப்பும் என பெரும் சிக்கலை கேரளா சந்தித்து வருவதை அடுத்து, பலரும் பல விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். 

 

இந்த நிலையில் தற்போது தேமுதிக-வின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த்,  சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தேமுதிக ஆதரிக்கவில்லை என அறிவித்துள்ளார். 

 

மேலும், பல காலமாக சபரிமலையில் கடைபிடித்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது என்றும், எந்த ஒரு மதத்தின் கொள்கையையும் உடைப்பதில் தேமுதிக-வுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியவர், ஜாதி, மத அடிப்படையில் மனித குலத்தை பிரிக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 

Tags : ##SABARIMALAFORALL ##WOMENINSABARIMALA ##SABARIMALAPROTESTS #DMDK #VIJAYKANTH #PREMALATHAVIJAYKANTH