சன்னிதானத்தை அடைந்தால் இழுத்து மூடுங்கள்.. பந்தள மன்னர்.. திரும்பிய 2 பெண்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 19, 2018 02:46 PM
2 Women Stopped 500m Short of Sabarimala Temple

சபரிமலை சன்னிதானத்தில் பெண்கள் உள்ளே நுழைந்தால் சன்னிதானத்தை இழுத்து மூட மேல்சாந்திக்கு பந்தள மன்னர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சபரிமலையில் நடைபெறும் போராட்டம் காரணமாக, நியூயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளர் கோவிலுக்கு செல்லும் முயற்சியில் இருந்து பின்வாங்கினார்.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் மேலும் வலுத்ததை அடுத்து, இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், கடும் பதற்றத்திற்கு மத்தியில் செய்தியாளர் உட்பட  2 பெண்கள் ஐஜி ஸ்ரீஜித் தலைமையில் 150 அதிரடிப்படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி சென்றனர். ஆந்திராவை சேர்ந்த மோஜோ சேனலின் பெண் பத்திரிகையாளர் கவிதா தலையில் தலைக்கவசம் அணிந்தும், அவருடன் கொச்சியைச் சேர்ந்த பெண்ணியவாதி ரஹானா பாத்திமா இருவரும் சென்றனர்.

 

எனினும் கவிதா சபரிமலை சன்னிதானத்துக்குள் நுழையும் முடிவில் மாற்றமில்லை என்றும், சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.