விஜயதசமி பரிசு: பெண் 'குழந்தைக்கு' அப்பாவான பிரபல நடிகர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 19, 2018 08:13 PM
Actor Dileep and Kavya Madhavan welcome a Baby Girl!

பிரபல மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் தம்பதிக்கு விஜயதசமி தினமான இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதுகுறித்து நடிகர் திலீப் தனது பேஸ்புக் பக்கத்தில்,''இந்த விஜயதசமி தினத்தில் எனது மீனாட்சிக்கு ஒரு குட்டி சகோதரி கிடைத்திருக்கிறாள். தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். உங்கள் அன்பும் பிரார்த்தனையும் என்றும் எங்களுக்கு உள்ளது'' என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

திலீப்-நடிகை மஞ்சு வாரியர் இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2016-ம் ஆண்டு நடிகை காவ்யா மாதவனை திலீப் மணந்து கொண்டார். எனினும் மகள் மீனாட்சி திலீப் உடன்தான் இருக்கிறார். இதனை மனதில் கொண்டே மீனாட்சிக்கு தங்கை பிறந்திருக்கிறாள் என திலீப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #KERALA #DILEEP #BABYGIRL