பல நாள் போலீஸ்.. காரணமின்றி கடைகாரரை அடித்ததால் அகப்பட்ட சம்பவம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 24, 2018 11:36 AM
Man Arrested for Disguising As Cop, Thrashing Shop Owner

டெல்லியில் கால்துறை யுனிஃபார்மை போட்டுக்கொண்டு, கடைகாரரை அடித்துள்ள சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது. 36 வயதான தீபக் சௌத்ரி என்பவர் தீபக் மான் என்கிற மாற்றுப் பெயரில் டெல்லியில் கடை வைத்திருக்கும் கடைகாரரை காரணமின்றி அடித்துள்ளார். 

 

சிசிடிவி வீடியோ மூலம் சோதனை செய்ததில் தீபக்  சௌத்ரி செய்த மாறுவேட பித்தலாட்டத்தை அறிந்தவுடன் தீபக் சௌத்ரிக்கு போலீசார் போன் செய்து பார்த்துள்ளனர். ஒரு வழியாக கண்டுபிடித்த பின்னர் கைது செய்யப்பட்டார். மால்வியா நகரில் கடை வைத்திருக்கும் சாகர் என்பவரிடம் எப்போதுமே போலீஸ் உடையை அணிந்துகொண்டு வரும் தீபக் சௌத்ரி, அந்த கடையில் டி-ஷர்ட் தொடங்கி மொபைல் போன் வரை தள்ளுபடியில் வாங்கியுள்ளார். 

 

தன் அடையாளத்தை மறைத்து போலீஸ் என்கிற அடையாளத்தை பயன்படுத்தி பல வருடங்களாக ஃபோர்ஜரி வேலை செய்துகொண்டிருந்தவர், திடீரென சாகரை காரணமில்லாமல் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாகர் போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, தீபக் சௌத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : #DELHI #DISGUISE #POLICE #FRAUDSTER #CCTV #VIRAL