"பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் எம்.பி-யின் மகன்":அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 16, 2018 01:17 PM
Former BSP MP\'s Son Waves Gun Outside 5-Star Hotel In Delhi

டெல்லியில் இருக்கும் ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி-யின் மகன் துப்பாக்கியுடன் மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அந்தக் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

டெல்லியின் நட்சத்திர ஓட்டல் வெளியே ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலானது. கடந்த அக்டோபர் 14-ம் தேதி இந்தக் காட்சி பதிவாகியிருந்தது. சில விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பிங்க் நிர கால்சட்டை அணிந்த அந்த நபர் வலது கையில் துப்பாக்கியுடன் ஒரு இளம் பெண் மற்றும் ஆணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அங்கு வந்து ஓட்டல் பணியாட்கள் உள்ளிட்டோர் சமாதானப்படுத்துகின்றனர்.

 

இந்நிலையில் வீடியோவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டானர்.விசாரணையின் முடிவில் வீடியோவில் துப்பாக்கியுடன் வரும் நபர், ஆஷிஷ் பாண்டே என்றும், அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி-யின் மகன் என்றும் தெரிய வந்துள்ளது.10 நொடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவில்,பாண்டே ஒரு பெண்ணுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்.ஒரு கட்டத்தில் பாண்டேவுடன் வந்திருந்த நண்பர்களும் ஓட்டல் ஊழியர்களும் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர்.

 

இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல் துறை, ஆயுதங்கள் தடுப்புச் சட்டத்திற்குக் கீழ் பாண்டே மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : #DELHI