'ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கெடையாது'... கணவர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 24, 2018 11:24 AM
Soldier Lance Naik Ranjeet Singh wife delivers baby before his funeral

மறைந்த ராணுவ வீரர் ரஞ்ஜீத் சிங்கின் மனைவி, அவரது இறுதிச்சடங்கின்போது சொன்ன வார்த்தைகள் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

 

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலில், காஷ்மீர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்ஜீத் சிங்குடன் சேர்த்து மேலும் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைப் பார்க்க 2 மாதங்கள் விடுமுறை எடுத்திருந்த ரஞ்ஜீத் சிங்கும் இந்த மோதலில் ஈடுபட்டு உயிரிழந்தார். தனது குழந்தையை கையில் ஏந்த வேண்டும் என்பதே அவரின் லட்சியமாக இருந்தது.

 

இந்தநிலையில் ரஞ்ஜீத் இறந்த மறுநாளே அவரது மனைவி சிம்பு தேவி அழகான பெண் குழந்தையை மருத்துவமனையில் பெற்றெடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,'' இவள் இந்தியாவின் மகள்.வளர்ந்து ராணுவத்தில் என் மகள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை,'' என தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து பிறந்து ஒருநாள் ஆன தனது குழந்தையுடன் தனது கணவரின் இறுதிச்சடங்கிற்கு நேரில் சென்ற சிம்பு தேவி,'' ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கிடையாது. பாரத் மாதாகி ஜே,'' என முழங்கினார்.

 

இதற்குப்பின் ரஞ்ஜீத் சிங்கின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதேபோல இந்த மோதலில் உயிரிழந்த பிற ராணுவ வீரர்களின் உடல்களும் அவரவர்களின் சொந்த ஊர்களில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags : #INDIANMILITARY #INDIA