விராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 23, 2018 03:41 PM
Virat Kohli is the Best Captain for me in IPL, Says AB De Villiers

வீராட் கோலிதான் தனக்கு மிகச்சிறந்த கேப்டன் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்  போட்டிகளின் முக்கியமான பேட்ஸ்மேனுமான ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருப்பதையடுத்து கோலி ரசிகர்கள் பெருத்த உற்சாகத்தில் உள்ளனர். 

 

இதுபற்றி அவர் ஒரு தனியார் பத்திரிகை சேனலுக்கு அளித்த பேட்டியில் நியூசிலாந் கேப்டன் கேன் வில்லியம்சன்,  தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃபாஃப் டூ ப்ளசிஸ் ஆகியோர் செய்வதை உணர்ந்து செயல்படும் நல்ல கேப்டன்கள் என்று கூறியுள்ளார். அதோடு, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை தனக்கு விராட் கோலிதான் மிகச் சிறந்த கேப்டனாக இருந்தவர் என்று நெகிழ்ந்து கூறியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ். 

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மே மாதம் அறிவித்திருந்த ஏபி டி வில்லியர்ஸ், இந்திய அணி வலுவாக இருப்பதாகவும், கடந்த முறை உலகக்கோப்பையை இந்தியா வென்றதாகவும், இம்முறை தென்னாப்பிரிக்க அணி வெல்லலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Tags : #VIRATKOHLI #AB DE VILLIERS #CRICKET #INDIA #CAPTAIN #IPL