தடை இல்லை:ஆனால் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதா?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 23, 2018 10:55 AM
No ban on sell of firecrackers, but with certain conditions, SC

நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்புகள் குறித்த பொது நல வழக்குகள் தனி வழக்கறிஞர்களாலும் பொது ஸ்தாபன அமைப்புகளாலும் தொடரப்பட்டிருந்தது. 

 

முன்னதாக சுற்றுச் சூழல் மாசுபாடு, மக்கள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் விரிவுபடுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

 

எனினும் எதிர்பார்த்தது போலவே, நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ விற்பனை செய்யவோ தடை இல்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யவும், வெடிக்கவும் மற்றும் விற்பனை செய்யவும் தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஆன்லைனில் பட்டாசுகளை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்தாகவும் இரவு 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி நெருங்கும் வேளையில் இத்தகைய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Tags : #FIRECRACKERSVERCIT #DIWALI #SUPREMECOURT #DELHI #INDIA