2017-18ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 22, 2018 04:56 PM
millionaires in India reaches 60 percentage

2017-18ம் ஆண்டுக்கான கணக்கு தாக்கலின் படி இந்தியாவில் சுமார்  1 லட்சத்து 40 ஆயிரத்து 139 பேரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருப்பதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவித்துள்ளன. 

 

முன்னதாக 2014-15ம் ஆண்டின்படி ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தவர்கள் 88 ஆயிரத்து 649 பேர்களே இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 

 

இதேபோல் இந்தியாவில்  முறையாக வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 3.31 கோடியில் இருந்து 5.44 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

Tags : #INDIA #MILLIONAIRES #RICHESTINDIA #INCOMETAX