"சட்டம்,ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம்"...தூங்கி வழிந்த காவல்துறை அதிகாரிகளால் பரபரப்பு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 16, 2018 10:14 AM
Police officers seen sleeping during a law and order meeting in Patna

பீகாரில் துர்கா பூஜைக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தூங்கி வழிந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த மாநிலத்தின் பாட்னா நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத்தின் காவல்துறை உயரதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் சிலர் தூங்கி கொண்டும்,தங்களுடைய செல்போனில் தகவல்களை பரிமாறி கொண்டும் இருந்தார்கள்.அதன் வீடியோ காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் ஆலோசனை கூட்டத்தில்  அதிகாரிகள் கடமை தவறிய காட்சிகள் வெளியானதால், அவர்களை கட்டுக்குள் வைக்க நிதீஷ் குமார் தவறி விட்டதாக  கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Tags : #POLICE #PATNA COPS #FOUND SLEEPING #LAW AND ORDER #DURGA PUJA