96 India All Banner
Ratsasan All Banner

இந்த ஆட்டம் போதுமா?.. சிசிடிவி கேமராவில் திருடன் குத்தாட்டம்,போலீஸ் திணறல்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 09, 2018 04:05 PM
Watch Video: Thief dances in front of CCTV camera after robbing

திருடன் ஒருவன் திருடிவிட்டு செல்லும்போது சிசிடிவி கேமரா முன்னால் ஆட்டம் போட்டு விட்டு செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சர்கசன் என்ற கிராமத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் ரூபாய் 1.81 லட்சம் மதிப்புள்ள நகைகள் கடந்த மாதம் திருடு போயின. தொடர்ந்து அதே அபார்ட்மெண்ட் ஒன்றில் உள்ள மற்றொரு வீட்டில் ரூபாய் 60,500 ரூபாய் மதிப்புள்ள நகைகள் கடந்த 6-ம் தேதி திருடு போயின.

 

இதைத்தொடர்ந்து போலீசார் துரித விசாரணையில் இறங்கி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் திருடர்கள் திருடிச் செல்லும்போது ஒரு திருடன் மட்டும் சிசிடிவி கேமராவை எட்டிப்பார்த்து டான்ஸ் ஆடி விட்டு செல்கிறான்.

 

எனினும் இன்னும் இந்த திருட்டு கும்பலை, போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #POLICE #CCTV #GUJARAT