96 India All Banner
Ratsasan All Banner

ஏஜெண்டுகள் உதவியுடன் அழுகிய இறைச்சிகளை விற்கும் உணவகங்கள்..உஷார் மக்களே!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 09, 2018 03:52 PM
Restaurants selling rotten meat - People be careful

தமிழக அரசின் புதிய உணவு பாதுகாப்புப் பிரிவு கமிஷனராக பொறுப்பேற்றுள்ள அமுதா, தனக்கு வந்த புகார்களின் பேரில் சென்னையில் உள்ள ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தலைமை அலுவலகத்திற்கு  உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான டாக்டர் கதிரவன் மற்றும் அவரது குழுவினரை அனுப்பினார். அவர்கள் அங்கு நடத்திய அதிரடி சோதனையில் உணவகத்தினர், மன்னிப்பு கோரினர். ஆனாலும் ஹோட்டலுக்கு சீல் வைத்து மூடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.


இதேபோல், இதே டீம் அடுத்து வந்த ஒரு தகவலின் பேரில் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள  ஒரு இடத்தில் சோதனை நடத்தியதில் 2000 கிலோ எடை கொண்ட கெட்டுப்போன இறைச்சி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து,  தற்போது சென்னை சைதாப்பேட்டையில் இறைச்சி கடைகளில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கெட்டுப்போன 500 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.


இதனை விசாரித்த டாக்டர் கதிரவன் கூறும்போது, மாடு, பன்றி, கன்றுக்குட்டி உள்ளிட்ட உணவு இறைச்சிகளை வெட்டி தெர்மோகோல் பாக்ஸ் பேக்கிங் முறையில் உணவகங்களுக்கு மலிவு விலையில் அனுப்பி வைக்குன்ம் ஏஜெண்டுகள் நிறைய பேர் இருப்பதாகவும் அவர்கள் பெரிய ஹோட்டல்கள், பேருந்து நிலையங்களில் உள்ள சிறுசிறு ஹோட்டல்களுக்கு சப்ளை செய்வதாகவும், வாடிக்கையாளர் கேட்கும் இறைச்சிக்கு பதில் கெட்டுப்போன இறைச்சிகளை ஆட்டிறைச்சிக்கு பதில் மாட்டிறைச்சி எனவும் கலந்து கொடுத்து ஏமாற்றுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இத்தகைய தண்டனைக்குரிய செயல்களை அநேகமானோர் செய்வதாகவும் செய்பவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : #ROTTENMEAT #TAMILNADU #TNHEALTH