கள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற மகள் உட்பட 4 பேருக்கு சிறை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 03, 2018 04:40 PM
4 including daughter in jail for murder of dad

சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர் சசிகலா.  கடந்த 2015ம் ஆண்டு சசிகலா, வேறு நபருடன் தொடர்பில் இருந்ததை, சசிகலாவின் தந்தை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. 


இதன் காரணமாக தந்தை மீது அதிருப்தியில் இருந்த பெண் சசிகலா, தன் நண்பர்களான  தீபன், மணிகண்டன் மற்றும் ராஜ் எனும் மூவருடன் சேர்ந்து கொலை கடந்த 2015-ம் வருடம் கொலை செய்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சேலம் இரண்டாம் நடுவர் நீதிமன்ற பிரிவு  சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

 

கள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல என்கிற தீர்ப்பு வரும் முன்னே நிகழ்ந்த குற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags : #MURDER #VERDICT #TAMILNADU #CRIME