தென்காசி: 17 நாளுக்கு பிறகு நீங்கிய 144 ஊரடங்கு உத்தரவு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 30, 2018 12:27 PM
Imposed 144 has been cleared now after 17 days in tenkasi

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி வருடாவருடம் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. பிரசித்தி பெற்றதாக கருதப்படும் இங்கு விநாயகர் சதுர்த்தி தொடங்கிய நாள் முதல் உள்ளூர் தகராறுகள் நிகழ்வதும் கடந்த சில வருடங்களாக நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி தொடங்கி விநாயகரை ஆற்றில் கரைக்கும் சமயத்தில், விநாயகர் ஊர்வலத்தில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து,  இது கலவரத்தையும் மக்களின் அமைதியையும் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக சுமார் 17 நாட்களாக தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நடைமுறையில் இருந்தது. இந்த தடை உத்தடவு இன்று காலை முடிவுக்கு வந்ததை அடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

Tags : #VINAYAKARCHADURTHI #TENKASI #TAMILNADU #144