கருணாஸ் வழக்கு : காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 26, 2018 04:06 PM
Karunas Case - Court dismisses police\'s petition

கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையினரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாலும், சாதி சார்ந்த சர்ச்சைக் கருத்துக்களை பேசியதாலும் கடந்த 23-ம் தேதி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டார்.


6-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு போடப்பட்டு சிறைக் காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையினரின் மனுவுக்கு எதிரான வாதத்தை கருணாஸ் தரப்பு முன்வைத்தது.  இதனையடுத்து, கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம், காவல்துறையினரின் மனுவை தள்ளுபடி செய்தது.

Tags : #KARUNASARREST #TAMILNADUPOLICE #TAMILNADU