பிறந்த நாளில் உயிரை பணயம் வைத்து.. அந்தரத்தில் தொங்கிய பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 26, 2018 04:01 PM
Will Smith Bungee Jumps Out of a Helicopter on his 50th birthday

ஹாலிவுட் பிரபலங்கள் சாதாரணமாக செய்யும் விஷயங்கள் கூட வைரலாகிவிடுகிறது.பிறந்தநாள் என்றால் சொல்லவா வேண்டும்.அந்த வகையில் தனது பிறந்தநாளில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் வில் ஸ்மித் செய்த விஷயம்தான் தற்போது ஹாட் டாபிக்.

 

பேட்பாய்ஸ், மென் இன் பிளாக், பர்சூட் ஆஃப் ஹாப்பினஸ் என பல படங்களில் நாயகனாக கலக்கிய ஹாலிவுட் ஆக்‌ஷன் ஸ்டார் வில்ஸ்மித்தின் 50-வது பிறந்த தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்த ஸ்மித் தனது உயிரை பணயம் வைத்து ஒரு சாகசத்தை நிகழ்த்த எண்ணினார்.

 

அதன்படி அமெரிக்காவின்  அரிசோனாவில் உள்ள கிராண்ட் கேன்யான் என்ற பகுதி  உலகின் மிக ஆழமான பள்ளத்தாக்காகும்.அங்கு சென்ற வில் ஸ்மித், ஹெலிகாப்டரில் இருந்து "பன்கீ ஜம்ப்" செய்து சாகசம் புரிந்துள்ளார்.சுமார் 1,857மீட்டர் ஆழம் கொண்ட கிராண்ட் கேன்யான் பகுதியில், ஹெலிகாப்டரில் தனது குழுவுடன் சென்ற வில் ஸ்மித், அங்கிருந்து குதித்து, அந்தரத்தில் தொங்கி ஊஞ்சலாடியபடி செய்த சாகசம், பார்ப்பவர்களுக்கே மெய்சிலிர்க்கும் அனுபவமாக அமைந்தது.

 

50 வயதை கடந்து விட்ட ஸ்மித் இப்போதும் சண்டை காட்சிகளில் ஆர்வமுடன் நடிக்கிறார்.தன்னுடைய வாழ்க்கையிலேயே மிக மோசமான மற்றும் பயங்கரமான அனுபவமாக இந்த பங்கி ஜம்ப் இருந்ததாகவும், இது தனது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் எனவும்  சாகசத்தை முடித்த பின்னர், வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Tags : #WILL SMITH #BUNGEE JUMPS #HELICOPTER