'தளபதி' சர்ச்சைக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதில்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 03, 2018 04:31 PM
Udhayanidhi Stalin responds to Thalapathy controversy BNS

நடிகர் விஜய்யை தளபதி என்று அழைக்கிறார்களே என, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.

 

இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில்,'' விஜயயை தளபதி என்று அழைப்பதை,திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர்..பார்த்து செய்ங்க சார் @Udhaystalin,'' என உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டிருந்தார்.பதிலுக்கு உதயநிதி ஸ்டாலின்,''ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் !,'' என பதிலளித்துள்ளார்.

 

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக 'கண்ணே கலைமானே' படம் வெளியாகவுள்ளது. தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சைக்கோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.