'நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்'...மாறி-மாறி வாழ்த்திக்கொண்ட ரித்து-ஐஸ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 01, 2018 08:16 PM
BiggBoss Tamil: Congrats my Friend says, Aishwarya Dutta

நேற்று நடைபெற்ற பிக்பாஸ் இறுதி விழாவில் ரித்விகா டைட்டில் வின்னராகவும், ஐஸ்வர்யா ரன்னர் அப் ஆகவும்  அறிவிக்கப்பட்டனர். இருவரும் முழுதாக 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து போராடியவர்கள் என்பதால் இருவருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் ரித்விகா, ஐஸ்வர்யா இருவரும் நல்ல நண்பர்களுக்கு உதாரணமாக மாறி,மாறி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். ஐஸ்வர்யா தனது டிவிட்டர் பக்கத்தில்,''வாழ்த்துக்கள் ரித்து.  நீ இதற்கு தகுதியானவள் தான். நீ வெல்வாய் என எனக்குத் தெரியும்.விரைவில் நாம் சந்திப்போம்,'' என வாழ்த்தியுள்ளார்.

 

பதிலுக்கு ரித்விகா,'' நன்றி பேபி. பிக்பாஸில் நீ ஒரு வலிமையான போட்டியாளர்,'' என தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.