'ஜெய் ஹிந்துக்காக' இசைப்புயல்-கிங் கானுடன் கைகோர்த்த நயன்தாரா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 18, 2018 09:40 PM
Jai Hind Promo Video: AR Rahman, Nayanthara, Shah Rukh Khan unite

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் அவரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் ஹாக்கி வீரர்களுக்கு அர்ப்பணிக்கும் பொருட்டு ஜெய்ஹிந்த் இந்தியா என்ற பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி வருகிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் நடித்துள்ளார்.

 

டிரம்ஸ் சிவமணி, சாஷா திருப்பதி, ஸ்வேதா மோகன், நீதி மோகன் ஆகியோருடன் இணைந்து தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர்களும் இந்த பாடலில் தங்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

Tags : #NAYANTHARA #ARRAHMAN