சர்கார் படத்தில் வரும் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 07, 2018 07:28 PM
Kadambur Raju,asked the team of Sarkar to remove a few scenes

சர்கார் படம் தொடர்பான சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கச் சொல்லி கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார். விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என்றும் கூறியுள்ள கடம்பூர் ராஜூ, இதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

 

மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் மத்திய சென்சார் போர்டுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்பில்லை ஆயினும், சில காட்சிகளை நீக்கச் சொல்லி அரசு தரப்பில் இருந்து அறிக்கை வந்துள்ளதாகவும் கூறியவர், அவற்றை தானாகவே படக்குழுவினர் முன்வந்து நீக்கினால் நல்லது என்றும் இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Tags : #VIJAY #SARKAR #SUNPICTURES #ARMURUGADOSS #ARRAHMAN