'சர்காருக்கு முன்னால' ஒரு ரூபா கெடைக்காது சார், பெரிய ரிஸ்க்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 05, 2018 12:54 PM
Producer Dhananjayan tweet on Kaatrin Mozhi release date

சர்கார் படத்துக்கு முன்னால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது என, 'காற்றின் மொழி' தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

 

ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காற்றின் மொழி' திரைப்படம் வருகின்ற 16-ம் தேதி வெளியாகவுள்ளது. சரியாக 10 நாட்களுக்கு முன் தளபதி விஜய்யின் 'சர்கார்' படமும், 13 நாட்களுக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் '2.0' திரைப்படம் வெளியாகிறது.

 

இதனால் நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக சாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்தத்தேதியை விட்டால் பிறகு 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற காரணத்தால், 16-ம் தேதி படத்தை வெளியிடுவதாக 'காற்றின் மொழி' படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

 

இந்தநிலையில் ரசிகர் ஒருவர்,'' காற்றின் மொழி தீபாவளிக்கேகூட  வந்திருக்கலாம்! 6 ஸ்கிரீனுக்கு ஒன்று கிடைச்சிருந்தால் கூட நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிருக்கும்,'' என தயாரிப்பாளர் தனஞ்ஜெயனிடம் கேட்டிருந்தார்.

 

பதிலுக்கு தனஞ்ஜெயன்,'' சர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது சார். அடுத்த வாரம் முழுவதும் பெரும்பாலான ரசிகர்களின் எண்ணம் 'சர்கார்' மீது தான் இருக்கும். பெரிய ரிஸ்க் சார்,'' என பதிலளித்துள்ளார்.

Tags : #VIJAY #KEERTHISURESH #KAATRINMOZHI #SARKAR