சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி 'தலைவனை' மாற்றிக்கொள்ள மாட்டேன்

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 30, 2018 05:12 PM
Actor Shanthanu apologises for Bhagyaraj story reveal

தனது அப்பாவின் செயலுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

 

சர்க்கார் வழக்கு சுமூகமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் பாக்யராஜ், ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,'' தவிர்க்க முடியாத சூழலில் தான் சர்கார் படத்தின் கதையை சொல்ல நேர்ந்தது,'' என்றார்.

 

இந்தநிலையில் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு, தனது தந்தைக்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன்  “இல்லை” !என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான்! அப்பா படத்தின் கதையை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.தீபாவளியை கொண்டாடுவோம்.Sarkar கொண்டாடுவோம் ! 😊,'' என தெரிவித்துள்ளார்.

 

Tags : #VIJAY #KEERTHISURESH #SHANTHANU