'ஆளப்போறான் தமிழன்'... தளபதி 63-யில் மீண்டும் இணைந்த 'மெர்சல்' கூட்டணி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 29, 2018 08:10 PM
GK Vishnu is the cinematographer of Thalapathy 63 BNS Tamil

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சர்கார்' திரைப்படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார்.

 

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவான தெறி, மெர்சல் படங்கள் சூப்பர் ஹிட்டடித்ததால், 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இப்படத்தினை மிகுந்த பொருட்செலவில் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'தளபதி 63' என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2019-ல் தொடங்கி 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தநிலையில் ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிப்பது போல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு தளபதி 63 படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாக, நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மெர்சல் படம் கலர்புல்லாக அமைய ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு முக்கியக் காரணமென்பதால் இப்படத்திலும் அவரது ஒளிப்பதிவு படத்துக்கு மிகுந்த பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #VIJAY #THALAPATHY63 #ATLEE #GKVISHNU