'உண்மைதான் ஜெயிக்கும்'.. ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிரபல நடிகை ஆதரவு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 29, 2018 03:48 PM
Actress Varalaxmi Sarathkumar supports AR Murugadoss on Sarkar story

விஜய்,கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி,யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். தீபாவளி பண்டிகையையொட்டி வருகின்ற நவம்பர் 6-ம் தேதி சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

 

இந்தநிலையில் சர்கார் படத்தின் கதையும், தன்னுடைய செங்கோல் படத்தின் கதையும் ஒன்றுதான் என வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும்,செங்கோல்’ கதையையும், ‘சர்கார்’ கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இரண்டிலுமே கதையின் மையக்கரு என்பது ஒன்றுதான்,'' என திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் கடிதம் வழியாக தெரிவித்துள்ளார்.

 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது தரப்பு தொடர்பான விளக்கங்களை சமீபத்தில் நமது தளத்திற்கு அளித்த பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநர் முருகதாஸ்க்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார். அதில்,''என் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பக்கம் நான் நிற்கிறேன், உண்மை தான் ஜெயிக்கும். உண்மை எப்போதுமே வெற்றிபெறும். காலம் பதில் சொல்லும்,'' என தெரிவித்திருக்கிறார்.

 

முன்னதாக ஸ்பைடர் தயாரிப்பாளர் தாகூர் மது மற்றும் சர்கார் இணை எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் இந்த விவகாரத்தில் தங்களது ஆதரவினை ஏ.ஆர்.முருகதாஸ்க்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIJAY #VARALAXMISARATHKUMAR #KEERTHISURESH #SARKAR #ARMURUGADOSS