'கதைக்கருவில் மட்டும் தான் ஒற்றுமை'.. மற்றபடி சர்க்காருக்கு எல்லாமே நான் தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 30, 2018 04:08 PM
Sarkar Story Issue: Official video statement from A.R.Murugadoss

சர்கார் படத்தின் கதை என்னுடையது என,வருண் ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. சர்கார் படத்தில் வருண் ராஜேந்திரனின் பெயர் போட படக்குழு ஒப்புக்கொண்டது.

 

இந்தநிலையில் சர்கார் பிரச்சினை தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,'' மதிப்பிற்குரிய பாக்யராஜ் சார் என்னை அழைத்து இந்த மாதிரி ஒரு பிரச்சினை போயிட்டு இருக்கு. ஒருத்தனுடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுட்டாங்க என அவர் ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி ரெஜிஸ்டர் பண்ணி வச்சிட்டாரு.ஒருத்தனுடைய ஓட்டைக் கள்ள ஓட்டாகப் போட்டுள்ளனர் என்பது தான் படத்தின் கரு.

 

அந்த ஸ்பார்க் மட்டும் தான் ஒற்றுமை. மற்றபடி இந்த கதைக்கும் அந்த கதைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. ஆனால், நமக்கு முன்னாடி ஒரு அஸிடன்ட் ரெஜிஸ்டர் பண்ணிருக்காரு என்பதால் அவரைப் பாராட்டி  ஊக்குவிக்கும் வகையில் ஒரு கார்டு போட சொன்னாங்க. சரினு நான் ஒத்துக்கொண்டேன். மத்தபடி இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் ஏ.ஆர்.முருகதாஸ் தான். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஹேப்பி தீபாவளி” என்று தெரிவித்துள்ளார்.


 

Tags : #VIJAY #KEERTHISURESH #SARKAR