'யாருன்னு தெரியலையே'.. இசைப்புயலையே பிரமிக்க வைத்த கிராமத்து பெண்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 15, 2018 04:11 PM
Watch Video: AR Rahman impressed by Andhra woman\'s song

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர, அது வைரலாகி வருகிறது.

 

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியைச் சேர்ந்த பேபி என்ற பெண், ரஹ்மான் இசையில் வெளியான `காதலன்' திரைப்படத்திலிருந்து, என்னவளே பாடலை தெலுங்கில்  பாடியிருந்தார். இந்தப் பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதைப்பார்த்த ரஹ்மான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இதைப்பதிவிட்டு,‘ யார் எனத் தெரியவில்லை. பெயர் தெரியவில்லை. அருமையான குரல்’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

இதுவரை சுமார் 12 லட்சம் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர். மேலும்,உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் எனவும் ரஹ்மானைப் பாராட்டி வருகின்றனர்.

 

மேலும் உங்களது இசையில் பாட அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனவும், இசைப்புயலிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : #FACEBOOK #ARRAHMAN