‘எனக்கும் தங்கை இருக்கிறாள்’..என்று சொல்லி ரியல் ஹீரோ-வான இளைஞன்: வைரலாகும் மகளின் அம்மா எழுதிய கடிதம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 03, 2018 12:35 PM
Boy turns hero after helping a girl in this kind of situation Viral

முகநூலில் குர்கான் மம்ஸ் என்கிற பக்கம் ஒன்று இயங்கி வருகிறது. அதில் மகளைப் பெற்ற அம்மா ஒருவரின் உருக்கமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருவதோடு பலருக்கு பலவிதமான புரிதல்களை ஏற்படுத்தி வருகிறது. 

 

அந்த தாய் தன் முகநூலில், ‘என் மகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சமயத்தில் அவருக்கு பீரியட்ஸ் நாட்கள் என்பதால் ரத்தக் கசிவு உண்டாகியுள்ளது. ஆனால் அந்த சமயத்தில் சமயோஜிதமாக அருகில் இருந்த என் மகளை விட மூத்த ஆண்மகன் ஒருவன் தன் ஸ்வட்டரை கழட்டிக்கொடுத்து அதனை இடுப்பில் கட்டிக்கொண்டு ஸ்டைலாக செல்வது போல் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளான். முதலில் மறுத்த என் மகளிடன், தனக்கும் ஒரு தங்கை இருப்பதாக கூறிய அவனது பேச்சினை புரிந்துகொண்டு பின் அவன் கூறியபடியே என் மகள் செய்தாள். அவனை நல்லபடியாய்..நல்ல மகனாய் வளர்த்த அவனது அம்மாவுக்கு நன்றி’ என்று உருக்கமாகக் கூறியுள்ளார். 

 

பொதுவாக நம்முரில் வளரிளம் பருவப் பெண்களுடன் பழகுவதற்கே ஆண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் ஒரு பருவப் பெண்ணின் மாதவிடாய் சிரமங்களை பற்றிய புரிதல்கள் கொண்ட இளம் வயது ஆண்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள் என்கிற சிந்தனையை இந்த அம்மாவின் கடிதம் தூள்தூளாக்கியிருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

உண்மையில் பெரியவர்கள்தான் இதுமாதிரியான நேரங்களில் நம் வீட்டு பெண்களை தனிமைப் படுத்தியிருக்கிறார்கள் என்று பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பெண்களின் இதுபோன்ற சிரமங்கள் பற்றிய புரிதல்கள் எல்லா ஆண்களுக்கும் இருந்தால் பெண் மீதான அவன் பார்வையில் மதிப்பு மிகும் என்றும் கூறியுள்ளனர்.

 

மேலும் பெண்கள் மீதான்  வன்மமான பார்வையை கொண்ட ஆண்களுக்கு மத்தியில் இந்த சிறிய வயதில் இப்படி ஒரு மகனை வளர்த்த அம்மாவை பாராட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படித்தான் நாம் மகளையும் மகனையும் வளர்க்க வேண்டும் என்று பலர் கூறியதுடன், மேலும் இவன்’தான் ரியல் ஹீரோ என்றும் பலர் கமெண்டியிருக்கின்றனர். 

Tags : #GIRL #BOY #ITSAGIRLBOYTHING #VIRAL #FACEBOOK #REALHERO #SOCIAL