மேடையில் இருந்தபடியே வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வீசி எறியும் அமைச்சர்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 01, 2018 07:21 PM
Karnataka Revenue Minister RV Deshpande throws sports kits Viral Video

கர்நாடகாவின் கர்வார் பகுதியில் கோலாகலமாக நிகழ்ந்த ஓட்டப் பந்தய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே பரிசுபொருட்களை தூக்கி வீசியபடி வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

ஹாலியால் என்கிற இடத்தில் நிகழ்ந்த இந்த பரிசளிப்பு விழா , மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் நேரமின்மை காரணமாகவும் கூட்ட நெரிசல் காரணமாகவும் பரிசுபொருட்களை இவ்வாறு வழங்க வேண்டியிருந்ததாக கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே விளக்கம் கூறியுள்ளார்.

 

எனினும் வீரர்களுக்கு வழங்க வேண்டிய பரிசுபொருட்களை தூக்கி எறிந்துள்ளதை அடுத்து அவர் பரிசுபொருட்களை வழங்கிய விதம் பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

 

Tags : #VIRAL #VIDEO #KARNATAKAMINISTER #BENGALURU #RV DESHPANDE #HALIYALA #KALWAR #SPORTSKITS #VIRALVIDEO