குடைக்கும் ட்ரம்ப்க்கும் என்னதான் ராசியோ!:ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 30, 2018 12:08 PM
Trump fails to close and leaves umbrella outside the plane viral video

அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கும் குடைக்கும் இடையேயான கதைகள் ஏராளமானவை போல. ஆம், குடை சம்பந்தமான சர்ச்சைகளில் அல்லது பரபரப்பு செய்திகளில் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார் என்று சொல்லலாம். தற்போது அப்படித்தான் குடை சம்பந்தமான ட்ரம்ப்-ன்  இன்னொரு வீடியோ  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

வாஷிங்டன் டிசியின் மிக முக்கியமான விமான தளவாடம் ஆண்ரூஸ் ஏர்ஃபோர்ஸ் ஒன். இங்கிருக்கும் விமானத்தின் மூலம் ”எதிர்கால அமெரிக்க உருவாக்கம்” பற்றிய முக்கிய கருத்தரங்கத்தில் பேசுவதற்காக  புறப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் விமானத்தில் குடை பிடித்தபடி ஏறுகிறார்.

 

ஆனால் விமானத்தின் படிக்கட்டில் ஏறியபின் வாசலுக்குள் குடையுடன் செல்ல முயற்சிக்கும் ட்ரம்ப், பின்னர் குடையுடன் உள்ளே நுழைய சாத்தியமில்லை என்பதை அறிந்ததும் குடையை மடக்கி எடுத்துச் செல்லாமல் அப்படியே வெளியே விட்டுவிட்டுச் செல்லும் அவரது செயல்தான் பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் அங்கு செல்லும் மற்றொருவரும் அந்தக் குடையை மடக்கி வைக்காமல் உள்ளே செல்கிறார். கடைசியாக வரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குடையை எடுத்து மடக்கி பிளைட்டுக்கு உள்ளே வைத்துவிட்டு செல்கிறார்.

 

இந்த வீடியோ இணையதளத்தில் பரவலாக வைரலாகி வரவும், 72 வயதான ட்ரம்ப், தனது குடையை மடக்க முடியாமல் வெளியே விட்டு செல்கிறார். இதனை ஒரு சிறு குழந்தையிடம் கேட்டால் கூட அது சொல்லி தரும் என்றும் நியூக்ளியர் பாஸ்-கோட் எனப்படும் அணுக்கரு திட்டத்துக்கான முக்கிய கடவுச்சொற்களை பயன்படுத்தி உலகையே விரல்களுக்குள் அடைக்கு வைக்கும் ட்டம்ப்பின் விரல்கள் ஒரு குடை பட்டனை அழுத்தி அதை மூட தெரியாமலிருக்கிறது என்பன போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் ட்ரம்ப்.

 

முன்னதாக  வெள்ளை மாளிகையில் மனைவி மெலினாவை  நனையவிட்டு குடையை தன் பக்கம் ’லாவிட்டிக்கொண்ட’ ட்ரம்ப் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. 

 

Tags : #DONALDTRUMP #UMBRELLA #VIRAL #TROLL #AMERICANPRESIDENT #VIDEO