விராட் கோஹ்லியின் பிறந்த நாளுக்கு ரசிகனின் பிரம்மாண்ட ‘கலை பரிசு’ !

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 01, 2018 01:02 PM
Mumbai Artist Creates Virat Kohli Mosaic Art with 4482 diyas Viral

கிரிக்கெட்டுக்கான இந்திய ரசிகர்கள் எக்காலத்திலுமே குறைவில்லாமல் இருந்து வருவதை அனைவருமே அறிவர். அதுவும் தற்போதைய நிலவரத்தில் விராட் கோஹ்லிக்கு அதிக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.


சமீபத்திய சாதனையாக சச்சின் டெண்டுல்கரின் ரன் ரேட்டிங்கை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோஹ்லி கடந்து சென்றுள்ளதை அடுத்து கோஹ்லிக்கு இன்னும் ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர். இதனையடுத்து மும்பையில் ஹெவாலே என்கிற கலைஞர் 4,482 க்ளே லைட்டுகளுடன் கிட்டத்திட்ட 10 அடி அகலத்தில் 14 அடி நீளத்தில் விராட் கோஹ்லியின் மொசைக் ஆர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.


கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்திருக்கும் இந்த கலைஞர் விதவிதமான வண்ணங்களுடன் 8 மணி நேரத்துக்கும் மேலாக உழைத்து விராட் கோஹ்லியின் இந்த மொசைக் ஆர்ட்டினை உருவாக்கியுள்ளார். வரும் நவம்பர் 5-ம் தேதி கோஹ்லியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கென இந்த மொசைக் ஆர்ட்டினை உருவாக்கியதாக இந்த ரசிகர் நெகிழ்கிறார்.

 

Tags : #MUMBAI #VIRATKOHLI #VIRATKOHLIBIRTHDAY #ART #VIRATKOHLIMOSAICART #VIRAL