WATCH VIDEO: 'தல தோனி'க்கு 35 அடி உயர கட்-அவுட்.. கொண்டாடும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 31, 2018 06:09 PM
Kerala fans erect 35-foot-cut-out of MS Dhoni in Thiruvananthapuram

தங்களது அபிமான நடிகர்-நடிகைகளின் படங்கள் வெளியாகும்போது, கட்-அவுட் வைத்து அவர்களின் படங்களைக் கொண்டாடுவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

 

அதேபோல இந்திய கிரிக்கெட்டின் மிஸ்டர் கூல், ஸ்டம்பிங் மன்னன், மேட்ச் வின்னர் என ரசிகர்களால் பலவாறாக கொண்டாடப்படும், தல தோனிக்கு சுமார் 35 அடி உயரத்தில் கட்-அவுட் ஒன்று கேரளாவில் வைக்கப்பட்டுள்ளது.

 

நாளை இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம்  கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இதனையொட்டி 'அனைத்து கேரளா தோனி ரசிகர்கள் அமைப்பு' தோனிக்கு இந்த பிரமாண்ட கட்-அவுட்டினை வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

கட்-அவுட் உருவாகும் வீடியோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.

 

நம்ம 'தல' தோனிக்கு பெரிய விசில் அடிங்க.....